நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு, நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது. மீண்டும் ஆலையை மேம்படுத்தி 24 ஆயிரம் கரும்பு விவசாயிகள், 1 லட்சம் விவசாயத் தொழிலாளர்களை பாதுகாத்திட கோரி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் சங்க செயலாளர் தங்க. காசிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், ஆலையின் அரவை திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதை சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
மேலும் 2020-21ஆம் ஆண்டில் அரவை கரும்புக்கு ரூ. 4,500 வழங்கவேண்டும், 2019-20இல் அரைத்த கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 400 ஊக்கத்தொகை வழங்கவேண்டும், ஆலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும், வேளாண் கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு ஏற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்- மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்