நாகை மாவட்டம், மயிலாடுதுறை, மாப்படுகை சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர் ராமமூரத்தி. இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தார். இவர் தனது வீட்டில் கட்டப்பட்ட கொடிகம்பத்தில் துணி காய வைக்கும்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் ஈரத்துணி பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரை காப்பாற்ற சென்ற இவரது மகன் பிரதீப் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உதவி ஆய்வாளர் பலி - electrical shock
நாகை: மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி திருச்சிற்றம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.