ETV Bharat / state

மடிக்கணினி வழங்கக் கோரி பள்ளி முன்பு மாணவிகள் ஆர்ப்பாட்டம்!

பள்ளிப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்து மாணவிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Students protest
Students protest
author img

By

Published : Oct 16, 2020, 5:15 PM IST

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவிகள் தங்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படாததைக் கண்டித்து பள்ளி முன்பு இன்று (அக்.16) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2017 - 18 ம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளாகியும் மடிக்கணினி வழங்காமல் பள்ளி நிர்வாகம் அலைகழிப்பதால் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை பள்ளி தலைமையாசிரியரிடம் மனு அளித்தும் இதுவரையில் மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் பள்ளி முன்பு மடிக்கணினி வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என மாணவிகள் தமிழ்நாடு அரசு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : மாணவர்களை கான்கிரீட் போட வைத்த நகராட்சி ஒப்பந்ததாரர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.