ETV Bharat / state

அரசுக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக்கண்டித்து மாணவர்கள் சாலைமறியல் - தரக்குறைவாக பேசிய முதல்வர்

மயிலாடுதுறை அருகே அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்தும், தரக்குறைவாகப்பேசிய கல்லூரி முதல்வரைக் கண்டித்தும் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து மாணவர்கள் சாலைமறியல்

author img

By

Published : Oct 6, 2022, 10:52 PM IST

மயிலாடுதுறை: குத்தாலத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசுக்கல்லூரி திறக்கப்பட்டது. நிரந்தரக் கட்டடம் கட்டப்படாமல் அவசரகதியில் அறிவிக்கப்பட்டதால், வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த இக்கல்லூரி தற்போது குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் இயங்கி வருகிறது.

இக்கல்லூரிக்குப் போதுமான இடவசதி இல்லை, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றம்சாட்டி கடந்த வாரம் அக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அக்கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் மாணவர்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வகுப்பறை இடப்பற்றாக்குறை காரணமாக, கல்லூரி கட்டடத்தின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள தகரஷெட்டின்கீழ் மாணவர்கள் அமர்ந்து படித்து வந்துள்ளனர். அந்த இடத்தை கல்லூரி முதல்வர் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இன்று பூட்டியுள்ளார்.

இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் மாடி பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு, அமர்ந்து படிப்பதற்கு வகுப்பறை இல்லாதததைக் கண்டித்தும், தரக்குறைவாக நடத்தும் கல்லூரி முதல்வரைக் கண்டித்தும், கல்லூரி முன்பு மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து மாணவர்கள் சாலைமறியல்

இதையடுத்து, குத்தாலம் காவல் ஆய்வாளர் அமுத ராணி தலைமையிலான போலீஸார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து விரைவில் நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கல்.. தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.