மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற தொடக்க விழா பள்ளியின் நிர்வாக செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு அருளாசி வழங்கினார்.
தொடர்ந்து பரதநாட்டியம், கர்நாடக இசை கச்சேரி ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் வழங்கினர். சமீபத்தில் திருச்சி மண்டல அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்ற குருஞானசம்பந்தர் பள்ளியின் மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்து காண்பித்தனர்.
சக்கராசனம், அர்த்தபாதாசனம், மயூராசனம், உள்ளிட்ட பல்வேறு கடினமான யோகாசனங்களை மாணவ மாணவிகள் பார்வையாளர்கள் வியக்கும் வகையில் செய்து காட்டினர். தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கி ஆசி கூறினார். பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 1330 திருக்குறள்களுக்கு 12 மணிநேரம் இடைவிடாது நடனமாடிய 50 பரதக்கலைஞர்கள்!