ETV Bharat / state

அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் - கல்வித்துறை அலுவலர்கள் விசாரணை!

நாகை: தரங்கம்பாடி அருகேவுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் குறித்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்களின் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

students-complain-to-government-school-teacher-investigation-officials

author img

By

Published : Mar 12, 2020, 7:18 AM IST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 136 மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியரான நாராயண பிரசாத் (57) என்பவர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வருவதாகவும், மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், மாணவிகள் சிலரை தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல், கடந்த டிசம்பர் மாதம் தஞ்சாவூர், திருச்சி, கல்லணை ஆகியப் பகுதிகளுக்கு ஒருநாள் கல்வி களப்பணி சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதை வெளியே சொன்னால் செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அரசு உயர்நிலைப்பள்ளியில் விசாரணை மேற்கொள்ளும் அலுவலர்கள்.

தற்போது பள்ளிகளில் செய்முறை தேர்வுகளின் மதிப்பெண்கள் கொடுத்துள்ள நிலையில் நிலையில், சில மாணவிகள் ஆசிரியரின் பாலியல் வன்கொடுமை குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் இளவரசன் அளித்த புகாரின் அடிப்படையில், கல்வித்துறை அலுவலர்கள் பள்ளியில் விசாரணை நடத்திவருகின்றனர். கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்கள், மாணவர்களின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'ஓவர் வேகம்' 4 மாணவர்கள் உட்பட 6 பேரை தூக்கி வீசிய கார்- பதறவைக்கும் சிசிடிவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.