ETV Bharat / state

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை நிரப்பும் போராட்டம்

நாகப்பட்டினம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பாக மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

author img

By

Published : Mar 18, 2020, 11:16 PM IST

CAA
CAA

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பாக சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு போராட்டம்

இந்தப் போராட்டத்தில் புதிய குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், என்பிஆர் உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இஸ்லாமியர்களின் போராட்டத்தின் காரணமாக பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்தப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: ரூ.500 கோடியில் ஐந்து மேம்பாலங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.