ETV Bharat / state

புனித சவேரியார் ஆலயத்தில் ஸ்டேன் சுவாமிக்கு வீரவணக்கம்!

மக்களின் உரிமைக்காக போராடிய ஸ்டேன் சுவாமிக்கு, மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

stan swamy
ஸ்டேன் சுவாமிக்கு வீரவணக்கம்
author img

By

Published : Jul 18, 2021, 7:55 PM IST

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில், வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களின் உரிமைக்காகத் தனது உயிரை அர்ப்பணித்த மனித உரிமைப் போராளி மறைந்த ஸ்டேன் சுவாமிக்கு வீரவணக்க அஞ்சலி நடைபெற்றது.

பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டார்

church
புனித சவேரியார் ஆலயத்தில் ஸ்டேன் சுவாமிக்கு வீரவணக்கம்

அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த ஸ்டேன்சுவாமியின் போராட்ட பயணங்களையும், எதிர்கொண்ட சவால்களையும் எடுத்துக்கூறி புகழஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைதிப்பேரணி நடைபெற்றது. இதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைகளில் மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

church
புனித சவேரியார் ஆலயத்தில் பேரணி

பேரணியின் முடிவில் ஸ்டேன்சுவாமியின் படத்திற்கு அனைவரும் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: வன்னியர் தனி இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்துப் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.