ETV Bharat / state

ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை: ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து ரயில்வே தொழிலாளர்களுடன், பொதுமக்களும் இணைந்து போராட வேண்டும் என மயிலாடுதுறையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் கண்ணையா வலியுறுத்தினார்.

srmu protest
author img

By

Published : Jul 31, 2019, 2:29 AM IST

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ரயில்வே தொழிற்சங்கமான எஸ்ஆர்எம்யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் கண்ணையா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியின் முதல்கட்டமாக இரண்டு ரயில்கள், தெற்கு ரயில்வேயில் 30 ரயில் நிலையங்கள் 45 வருட குத்தகைக்கு தனியாரிடம் தாரைவார்க்கப்படவுள்ளது. ரயில்வே தனியாரிடம் கொடுக்கப்பட்டால் ரயில் டிக்கெட்டின் விலை உயரும்,பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.மேலும் லாபகரமாக இயங்கி வருகின்ற ரயில்வே தொழிற் சாலை மற்றும் ரயில்வே துறையின் 49 சதவீத பங்குகள் தனியாருக்கு கொடுக்கவுள்ளது.

கண்டன ஆர்பாட்டம்

மத்திய அரசின் இப்போக்கை கண்டித்து விரைவில் நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றும், ரயில்வே தொழிலாளர்களுடன் இணைந்து, பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Intro:ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கண்டித்து ரயில்வே தொழிலாளர்களுடன், பொதுமக்களும் போராட வேண்டும் மத்திய அரசை கண்டித்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டி:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரயில்வே தொழிற்சங்கமான சதர்ன் ரயில்வே மஸ்தூர் யுனியன் சார்பில் கண்டன வாயில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எஸ்.ஆர்.எம்.யு பொதுச்செயலாளர் கண்ணையா பங்கேற்று சிறப்புரையாற்றினார். 100நாட்களில் ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை தொழிற்சங்கங்கள் இணைந்து முறியடிப்போம் என்று அப்போது அவர் தெரிவித்தார். மேலும், ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும், முயற்சியின் முதல்கட்டமாக இரண்டு ரயில்கள் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. தெற்கு ரயில்வேயில் 30 ரயில் நிலையங்கள் 45வருட குத்தகைக்கு தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒரு டிக்கெட்டிலும், 53ரூபாய் மானியமாக வழங்கப்படுகின்றது. இதனை ரத்து செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. இதனால், ரயில் டிக்கெட் விலை உயரும், பொதுமக்கள் பாதிக்கப்படுவர், தனியாருக்கு ரயில்வேயை தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து, விரைவில் நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும், ரயில்வே தொழிலாளர்களுடன் இணைந்து, பொதுமக்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் சங்க துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பேட்டி: கண்ணையா - பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.எம்.யுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.