மயிலாடுதுறையில் அமைந்துள்ள மாயூரநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தப் பெற்றதாகும். இந்த ஆலையத்தின் அருகில் உள்ள காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 10 நாள்களும் அம்பாள் எழுந்தருளி தீர்த்தவாரி விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். ,
அதன்படி இந்தாண்டு கரோனா கட்டுபாடுகளுடன் 6ஆம் தேதி விழா தொடங்கியது. அந்த அவ்வகையில் 7ஆம் நாளான இன்று (நவ.12) திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனையொட்டி மாயூரநாதர்-அபயாம்பிகை வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
அதையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் குறித்து அவதூறு: 6 பேர் மீது வழக்கு