ETV Bharat / state

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! - Sri Lankan pirates attack Nagapattinam fishermen in the Mediterranean

நாகப்பட்டினம்: மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்கள் கொண்டு கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல், Nagappatinam, Sri Lankan pirates attack Nagapattinam fishermen in the Mediterranean, Sri Lankan pirates attack Nagapattinam fishermen
sri-lankan-pirates-attack-nagapattinam-fishermen-in-the-mediterranean
author img

By

Published : Mar 17, 2021, 2:25 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, நாகமுத்து, ரவிச்சந்திரன் ஆகிய மூன்று மீனவர்களும் கடந்த 15ஆம் தேதி பைபர் படகில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

நேற்று (மார்ச் 16) இரவு கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி மீனவர்கள் படகில் இருந்த மீன் மற்றும் மீன்பிடிச் சாதனங்களை பறித்து கொண்டு சென்றுள்ளனர்.

இன்று (மார்ச்17) காலை வேதாரண்யம் அருகே கரைத்திரும்பிய மீனவர்களை மீனவ பிரதிநிதிகள் மீட்டு நாகப்பட்டினம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் நாகப்பட்டினம் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இதையும் படிங்க: திருட்டுக்கு பயந்து பறக்கும் படையினரிடம் நகைகளை பறிகொடுத்த குடும்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.