நாகை மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான தாய்-சேய் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வேளாங்கண்ணியை அடுத்த வடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன், ஈசிஜி, ரத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
மேலும் கர்ப்பவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகிய நோய்கள் தொடர்பாகவும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மருத்துவர்கள் கர்ப்பக் காலத்திலுள்ள சிக்கல்கள் குறித்தும், அதைத் தீர்த்து ஆரோக்கியமாக வாழ்வது குறித்தும் கர்ப்பிணிப் பெண்களிடம் விளக்கினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதையும் படிங்க: மிளகு விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை!