ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் - சக காவலர்கள் நிதியுதவி - nagai district news

நாகப்பட்டினம்: கரோனாவால் உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கு மயிலாடுதுறை மாவட்ட காவலர்கள் நிதியுதவி வழங்கினர்.

சக காவலர்கள் நிதியுதவி
சக காவலர்கள் நிதியுதவி
author img

By

Published : Oct 29, 2020, 10:00 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் அருள்குமார். இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அக்டோபர் 22ஆம் தேதி உயிரிழந்தார்.

அருள்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மயிலாடுதுறை மாவட்ட அனைத்து காவலர்கள் மூலம் நிதி திரட்டி முதற்கட்டமாக 3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வழங்கினார்.

இதில், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் யுவபிரியா, மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சதீஷ், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் காவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, உயிரிழந்த சிறப்பு காவல் ஆய்வாளர் அருள்குமார் திருவுருவப் படத்திற்கு மாலை அனுவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: காவல் ஆய்வாளருக்கும் காளைக்கும் இடையேயான பாசப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.