ETV Bharat / state

மரணம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!

author img

By

Published : Jan 31, 2023, 10:56 PM IST

மயிலாடுதுறையில் மரணம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 27 குண்டுகள் முழங்க போலீசார் மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!
மரணம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!
மரணம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் ஊராட்சி புத்தகரம் கிராமத்தில் வசித்து வந்தவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அர்ஜுனன். இவர் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் பணி முடித்து வீட்டிற்கு சென்றவர் ஜன. 30 அதிகாலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார்.

உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பரிசோதனை செய்து இறந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. இவருக்கு சஞ்சய் குமார் ( 21) என்ற மகனும், சாருமதி (19) என்ற மகளும் உள்ளனர். புத்தகரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அர்ஜுனனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு அணிவகுப்புடன் அர்ஜுனனின் உடல் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு 27 குண்டுகள் முழங்க போலீசார் மரியாதையுடன் அர்ஜுனன் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:விவசாயியின் நெஞ்சைக் கீறி ஈரலை தின்னும் வியாபாரிகளின் செயல்? கண்ணீரில் பட்டதாரி விவசாயி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.