மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டாரப்பகுதிகளில் பாம்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற பாண்டியன் என்பவருக்கு பொதுமக்கள் தகவல் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் உமையாள்பதி, திருநகரி, கடவாசல், செம்மங்குடி, புழகாப்பேட்டை, சீர்காழி உழவர் சந்தை ஆகிய இடங்களில் 6 நல்ல பாம்பும் சட்டநாதபுரத்தில் 1 சாரைப்பாம்பும் என மொத்தம் 7 பாம்புகள் இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில், பாண்டியன் அவைகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிக்கு எடுத்துச்சென்று விட்டார்.
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பாம்புகள் புதருக்குள் இருந்து வெளியேறி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வருவதாகத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:தசரா நாளில் ராவணனை வணங்கத் தயாராகும் பஞ்சாப் குடும்பத்தினர்