ETV Bharat / state

மயிலாடுதுறையில் திருக்கல்யாண திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்! - mailaduthurai

நாகை: திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கற்று தரிசனம் மேற்கொண்டனர்.

மயிலாடுதுறையில் திருக்கல்யாண திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்
author img

By

Published : May 12, 2019, 8:56 AM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த திருமணஞ்சேரியில் உலக புகழ் பெற்ற உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடப்பெற்ற இந்த ஆலயம், கல்யாண சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோகிலாம்பாள் அம்பிகையை இங்கு திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது. திருமணத் தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இந்த கோயிலில் தினமும் நடைபெறும் திருமண பிராத்தனையில் பங்கேற்று, அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் கூடிய விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மயிலாடுதுறையில் திருக்கல்யாண திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

இந்நிலையில் ஆலயத்தின் சித்திரை திருவிழா 9ஆம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ உத்வாகநாத சுவாமிக்கு திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் திருமணம் நடைபெறும் இடத்திற்கு முன் வேதியர்கள் மந்திரம் முழங்க, மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம், மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Intro:திருமண பிரார்த்தனை ஸ்லமான திருமணஞ்சேரியில் அமைந்துள்ள உத்வாகநாத சுவாமி ஆலயத்தின் திருக்கல்யாண திருவிழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருமணஞ்சேரியில் உலக புகழ் பெற்ற உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது நாயன்மார்களால் பாடப்பெற்ற இந்த ஆலயம் கல்யாண சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோகிலாம்பாள் அம்பிகையை இங்கு திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது திருமணத்தடை உள்ளவர்கள் நீண்ட நாட்களாக வரன் அமைய அவர்கள் இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இந்த ஆலயத்தில் சித்திரை விழா கடந்த 9ஆம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான அருள்மிகு கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ உத்வாகநாத சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் திருமணம் நடைபெறும் இடத்திற்கு எழுந்தருளினர் அங்கு வேதியர்கள் மந்திரம் முழங்க மாலை மாற்றுதல் ஊஞ்சல் வைபவம் ஆகியவை நடைபெற்றது தொடர்ந்து மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது இவ் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.