நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவருக்கும், அவரது அக்கா கணவர் முனுசாமி என்பவருக்கும், தொழில் நிமித்தம் காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலைபார்த்துவந்த மணிகண்டன், பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த முனுசாமி, அவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் முனுசாமியும் அவரது நண்பர்களும் மணிகண்டனை ஓடஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதில், ரத்தக் காயத்துடன் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டனின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவலளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துனர். இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஈரோடு ஜல்லிக்கட்டு: 14 காளைகளை அடக்கிய மதுரை இளைஞருக்கு பைக் பரிசு!
தற்போது இறந்துள்ள மணிகண்டன், தேடப்படும் குற்றவாளி முனுசாமி ஆகிய இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு வேறொருவரை கொலைசெய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.