மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் அமைந்துள்ள தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானஅருள்மிகு சட்டநாதர் கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை மாத சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைப்பெற்றது. தொடர்ந்து கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதன்பின் பசு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த கோ பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பாடு நடத்தினர்.