பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில், சீர்காழி மீன்துறை அலுவலகத்தில் சார் ஆய்வாளராக பணியாற்றும் சங்கர் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி அட்டை வழங்க மீனவர்களிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள், லஞ்சப்பணம் 18 ஆயிரத்து 80 ரூபாயையும், விண்ணப்பங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், மீன்துறை சார் ஆய்வாளர் சங்கர் மீது நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்ட இரு காவலர்கள் பணியிடை நீக்கம்