ETV Bharat / state

பணத்தாசையில் நடைபெற்ற சீர்காழி சம்பவம்; விவரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - சீர்காழி இரட்டைக் கொலை

சீர்காழியில் நடைபெற்ற இரட்டைக்கொலை, கொள்ளை சம்பவம் பணத்தாசையில் நடைபெற்றதாகவும், தற்காப்புக்காகவே கொள்ளையன் ஒருவனை காவல் ஆய்வாளர் சுட்டதாகவும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Sirkali double murder case update
பணத்தாசையில் நடைபெற்ற சீர்காழி சம்பவம்; விவரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
author img

By

Published : Jan 29, 2021, 6:17 AM IST

நாகை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற இரட்டை கொலை, கொள்ளை சம்பவத்தில், குற்றவாளிகள் பணத்தாசையில் ஈடுபட்டதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, "கொள்ளையில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் தன்ராஜ் சௌத்ரியிடம் தங்க நகை வியாபாரம் செய்யும் கங்கர்ராம் என்பவரிடம் மணீஸ் என்பவர் பணியாற்றி வந்தார். அவர், சங்கர்ராமுடன் தன்ராஜ் சௌத்ரியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

தன்ராஜ் சௌத்ரியின் வீட்டில் அதிக அளவில் பணம், தங்க நகைகள் இருப்பதை அறிந்துகொண்ட மணீஷ் குறுகிய காலத்தில் முன்னேறவேண்டும் என்ற ஆசையில், கும்பகோணம் பகுதியில் வசித்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தனது நண்பர்களான ரமேஷ் பட்டேல், மகிபால் சிங், கருணாராம் ஆகிய மூவருடன் ஜனவரி 16ஆம் தேதி முதல் திட்டம் தீட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து கருணாராம் மற்ற மூவரையும் தனது காரில் அழைத்துக் கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு வீட்டின் வெளியே காத்திருந்தார்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா

வீட்டின் உள்ள நுழைந்த நபர்கள் தன்ராஜ் சௌத்ரியின் மனைவி, மகனை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு போலி துப்பாக்கியைக் காட்டி வீட்டில் இருந்த 12 கிலோ தங்க நகை, ஆறரை லட்சம் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது, உள்ளே அலறல் சத்தம் கேட்க மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தின் கருணாராம் காரை எடுத்துக்கொண்டு கும்பகோணத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து மற்ற மூவரும் தன்ராஜ் சௌத்ரியின் காரை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

ஜிபிஎஸ் கருவி சிக்னல் வர சுதாரித்துக்கொண்ட மூவரும் சீர்காழி அருகே எருக்கூரில் காரை நிறுத்திவிட்டு கொள்ளையடித்த நகைகளுடன் அருகிலுள்ள வயல்வெளி பகுதியில் பதுங்க முயற்சித்துள்ளனர். அதைக்கண்ட கிராம மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்த காவல்துறையிநர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

Sirkali double murder case update
கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள்

பின்னர் கொள்ளையர்களில் ஒருவரான மகிபால் சிங் காவலர்களைத் தாக்கியுள்ளார். உடனடியாக தற்காப்புக்காக பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் துப்பாக்கியால் அவரை சுட்டார்" என்று கூறினார்.

கொள்ளையர்களிடமிருந்து நகை, பணத்தை கைப்பற்றிய காவல்துறையினர், கொள்ளையர்கள் இருவரை மயிலாடுதுறை விரைவு நீதிமன்ற நீதிபதி அமிர்தம் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சீர்காழி கொள்ளை வழக்கு: காவல் நிலையத்தில் வழுக்கி விழுந்த குற்றவாளிகளுக்கு மாவுகட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.