நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அடுத்த முடிகண்டநல்லூர் கிராமத்திலுள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளியில் பிரேம்குமார் (28) என்பவர் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அந்த மாணவியை செல்ஃபோனில் படம் எடுத்து மிரட்டியதாகவும் மாணவியின் பெற்றோர், உறவினர் குற்றம் சாட்டி பள்ளியை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டுப் போட்டனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ஆசிரியர் பிரேம் குமாரை மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆசிரியர் பிரேம்குமார் புதுமை படைக்கும் ஆசிரியருக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!