ETV Bharat / state

பட்டாசு கடையா..? மிட்டாய் கடையா..? தீபாவளிக்கு புதிதாய் களமிறங்கி உள்ள பட்டாசு வடிவ மிட்டாய்கள்! - sweets

Sale of sweets in the form of crackers: மயிலாடுதுறையில் உள்ள பிரபல இனிப்பகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளைக் கவரும் வகையில் அணுகுண்டு, சங்குசக்கரம், ராக்கெட், புஷ்வானம் போன்ற பட்டாசு வடிவில் இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

sweets in the form of crackers
பட்டாசு வடிவில் இனிப்புகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 8:48 AM IST

பட்டாசு வடிவில் இனிப்புகள்

மயிலாடுதுறை: தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடை மற்றும் இனிப்பு உணவு வகைகள் தான். அந்த வகைகளில் பண்டிகை காலங்களை முன்னிட்டு, இனிப்பகம் உள்ளிட்ட கடைகளில் ஸ்பெஷலாக திண்பண்டங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் இனிப்பகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் புது முயற்சியாக 15 கிலோவில், பாலை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட அணுகுண்டு வடிவிலான சுவீட், 30 கிலோ எடையில் பூந்தியால் தயார் செய்யப்பட்ட 3 அடி உயரமுள்ள புஷ்வானம், ராக்கெட், 2 கிலோ எடை கொண்ட சங்கு சக்கரம் உள்ளிட்ட பட்டாசு வடிவிலான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் ஓமம் கலந்த குச்சி பிஸ்கட், பட்டர் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், மற்றும் எள்ளுமிட்டாய் உள்ளிட்ட திணைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மிட்டாய் வகைகள் என நூற்றுக்கணக்கான இனிப்புகளும், மிட்டாய் ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

வீட்டுமுறை பலகாரங்களான தினை, சாமை, வரகில் தயாரிக்கப்பட்ட அதிரசம், கருப்புஉளுந்து உருண்டை, கெட்டி உருண்டை, ரவா உருண்டை, கோதுமைமாவு உருண்டை என பல்வேறு பாரம்பரிய இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த திண்பண்டங்கள் அனைத்தும் காம்போ பேக்காகவும், தீபாவளி கிஃப்ட் பாக்ஸ் போன்ற வடிவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த திண்பண்டங்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதாகவும், வீட்டிற்கு தேவையான அளவாக தங்களுக்கு கிடைப்பதாலும், நேரம் மிச்சமாவதாலும் இது போன்ற ரெடிமேட் இனிப்பு பலகார வகைகள் மிகவும் உதவியாக இருப்பதாக இல்லத்தரசிகள் கூறுகின்றனர். தங்களுடைய சிறு வயதில் தாயாரால் செய்து தரப்பட்ட இந்த பாரம்பரிய பலகாரங்களை தங்கள் குழந்தைகளுக்கு செய்து தரும் வாய்ப்பு வெகுவாக குறைந்து விட்டது எனவும் தாய்மார்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:ரயில்வே தண்டவாளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! 4 பேர் பலி! ரயில் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.