சீர்காழி ஈசானிய கடைவீதி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் தனிபிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் கார்த்திக் (32) என்பவரது கடையில் தடைசெய்யபட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் அக்கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான ஹான்ஸ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரமாகும்.
பின்னர், தனிப்பிரிவு காவல்துறையினர் கார்த்திகை கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வனப்பகுதியில் கிடந்த பணப்பை, துப்பாக்கி.. பின்னணி என்ன?