நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த, தேரழுந்தூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முத்துக்குமார். இவர் சில தினங்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதைப் பயன்படுத்தி திருடன் ஒருவன் முத்துக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தையும், ஒன்பது சவரன் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளான்.
இதுகுறித்து முத்துக்குமார், குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், நாகை தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை வில்லியனூரைச் சேர்ந்த ராஜீவ்கண்ணன் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து பணத்தையும், நகையையும் மீட்டனர்.
திருட்டு நடைபெற்று 48 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு திருடனை கைது செய்து, பணத்தையும் நகையையும் மீட்ட தனிப்படை காவல் துறையினரை நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் பாராட்டினார்.
இதையும் படிங்க:
‘பெரியார் உலகமயமாகிறார்! உலகம் பெரியார்மயமாகிறது’ - வீரமணி நெகிழ்ச்சி