ETV Bharat / state

காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி

புதுச்சேரி: காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தெரிவித்துள்ளார்.

karaikal
karaikal
author img

By

Published : May 16, 2020, 4:17 PM IST

இதுகுறித்து அவர் கூறுகையில், ”கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரைக்கால் மாவட்டத்தில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது துபாயிலிருந்து காரைக்கால் வந்த 26 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களும் கரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளனர். இதன்மூலம் காரைக்கால் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: மதுரையில் இன்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.