மயிலாடுதுறையைச் சேர்ந்த கோயில் சிற்பத் தொழிலாளர்கள் 14 பேர், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், நந்திபெட் மண்டல் அண்ணாராம் கிராமத்தில் தங்கி சிற்ப வேலை பார்த்துவந்தனர்.
கரோனா ஊரடங்கு உத்தரவால் இவர்கள் சொந்த ஊர் திரும்பமுடியாமல் தவித்துவந்த நிலையில், தங்களை மீட்கக்கோரி வாட்ஸ்அப் மூலம் காணொலி ஒன்றை வெளியிட்டு, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப தெலங்கானா மாநில அரசின் பரிந்துரையின்பேரில், தொழிலாளர்கள் 14 பேரும் தனியார் வாகனம் மூலம் இன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதேபோல் வெளிமாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து மயிலாடுதுறைக்கு வந்த 290 பேர் அரசு மருத்துவமனை, சாய் விளையாட்டு அரங்கம், மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பற்ற இடம்... மோசமான உணவு - வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் டிரைவர்கள்!