மயிலாடுதுறை: நீடூர் நெய்வாசல் கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆதித்யன் (16), அவரது உறவினர்களுடன் கடந்த 25ஆம் தேதி பூம்புகார் கடற்கரைக்கு சென்றுள்ளார்.
அப்போது உறவினர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஆதித்யன் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார். இது குறித்து மாணவனின் உறவினர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இது தொடர்பாக தீயணைப்புத் துறையினர், மீனவர்கள் உதவியுடன் மாணவனை தேடினர். இந்நிலையில் மாணவன் உடல் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மாணவன் உடல் பூம்புகார் கடற்கரையோரம் கருங்கற்கள் கொட்டி வைத்துள்ள பகுதியில் சிக்கியுள்ளதை கண்ட கடலோர காவல்படையினர், தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி உயிரிழந்த சோகம்