ETV Bharat / state

பராசக்தி பட வசனங்களை பேசி கலெக்டரின் கவனம் ஈர்த்த பள்ளி மாணவி! - Tamil Nadu Day program

மயிலாடுதுறையில் 'தமிழ்நாடு நாள்' விழா சிறப்பு புகைப்பட கண்காட்சியில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி பராசக்தி படத்தின் வசனத்தை தத்ரூபமாக பேசி அனைவரையும் ரசிக்க வைத்தார்.

in mayiladuthurai school girl spoke Parasakthi movie dialogue at Tamil Nadu Day program
பராசக்தி பட வசனங்களை பேசி கவனம் ஈர்த்த மாணவி
author img

By

Published : Jul 19, 2023, 1:01 PM IST

பராசக்தி பட வசனங்களை பேசி கவனம் ஈர்த்த மாணவி

மயிலாடுதுறை: சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணா 18.07.1967-இல் பெயர் சூட்டினார். அந்த வகையில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்து இருந்தார்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடும் வகையில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.

நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற பேரணி தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், மாணவர்கள் தமிழ் மொழியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டனர். இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. ஜூலை 23 வரை நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்து வைத்தார். இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் துவங்கி வைத்த திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளும் தமிழ்நாடு குறித்த வரைபடமும் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை ஏராளமான மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

முன்னதாக மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பேச்சுபோட்டி, கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பேசி காண்பித்தனர். இதில் 2ம் இடம் பிடித்த கேசிங்கன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி நிதிஜாவின் பேச்சு அனைவரையும் உற்சாகமடையச் செய்தது.

சாமானியர்கள், பாமரன், நடுத்தர வர்க்கம், ஒடுக்கப்பட்டவர்கள், தமிழின் பெருமை, தமிழர்களின் பெருமையைப் பற்றி எழுதியது கலைஞரின் எழுதுகோல்தான் என்றும் ராஜகுமாரி, பராசக்தி படத்தில் கலைஞர் எழுதிய வசனங்களை மேற்கோள் காட்டி பராசக்தியில் சிவாஜி கணேசன் பேசிய வசனத்தை வார்த்தை மாறாமல் உயிரோட்டமாக மாணவி பேசினார்.

பல படங்களில் வசனம் எழுதி திரைத்துறையைப் புரட்டிப் போட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு அசத்தலாகப் பேசிய மாணவியை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.

இதையும் படிங்க: பராமரிக்க முடியாத கோயிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் - பொன் மாணிக்கவேல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.