ETV Bharat / state

திருக்கடையூர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்! - திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு நாளை சதாபிஷேக விழா நடைபெற உள்ளது.

திருக்கடையூர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்

author img

By

Published : May 30, 2022, 11:01 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலம் ஆதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

மேலும் இத்தலத்தில் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக அபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமியாக்கிய வரலாறு நிகழ்ந்த தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருக்கடையூர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்

இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு இன்று (மே 30) மாலை 80 வயதை அடைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக வந்துள்ளார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை, மற்றும் கஜ பூஜை செய்தார். தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நாளை (மே 31) காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வெள்ளியங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.