ETV Bharat / state

சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் 46 கிலோ கஞ்சா... இளம்பெண் உள்பட மூவர் கைது...

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் 46 கிலோ கஞ்சா உடன் இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டர்.

rs-9-20-lakh-worth-of-cannabis-seized-in-mayiladuthurai

author img

By

Published : Apr 5, 2022, 12:16 PM IST

மயிலாடுதுறை ரயில் நிலையம் வழியாக திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 23 கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. இதனைக்கொண்டுவந்த இளம்பெண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருச்சி மாவட்டம் தாராநல்லூரை சேர்ந்த சிவசங்கர் (25) அவரது மனைவி சத்யா ( 20), சரபேஸ்வரர்(19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

முதல்கட்ட தகவலில் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 46 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ. 9.20 லட்சம் என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஆந்திராவிலிருந்து காச்சிக்குடா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை திருத்தணி ரயில் நிலையத்தில் காவல் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.