ETV Bharat / state

ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது - Rowdy arrested for threatening to kill Police

சீர்காழியில் விசாரணைக்கு அழைத்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Rowdy arrested for threatening to kill Police
ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது Rowdy arrested for threatening to kill Police
author img

By

Published : Mar 22, 2022, 11:32 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அர்ஜுனன். இவர் கடந்த 19 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக புத்தூரை சேர்ந்த செந்தில் என்பவரை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்பொழுது செந்தில், தான் ஒரு மிகப் பெரிய ரவுடி என்றும் தன்னை விசாரணைக்கு அழைத்தது தவறு என்றும் எச்சரித்து, ஆபாசமாகப் பேசி சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்க்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பான தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரவுடி செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அர்ஜுனன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரவுடி செந்திலை தேடிவந்தனர்.

Rowdy arrested for threatening to kill Police
ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

இந்நிலையில் காவல்துறையினர் தேடுவதை அறிந்த செந்தில் சீர்காழியிலிருந்து தப்பிச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாகப் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகை நயன்தாராவை கைது செய்ய வேண்டும்... காவல் ஆணையரிடம் புகார்...

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.