மயிலாடுதுறை : சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
மழை ஓய்ந்து 11 நாட்கள் கடந்த நிலையில் உமையாள்பதி கிராமத்தில் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என தெரிவித்தும், அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் போதாது, கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் 200 க்கும் மேற்பட்டோர் சீர்காழியில் இருந்து மாதானம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக சீர்காழி மாதானம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:பெண் எஸ்பி பாலியல் வன்கொடுமை வழக்கு - நீதிமன்றத்தில் சீமா அகர்வால் சாட்சி