மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்டங்களில் நேற்று (மே.16) 602 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தருமபுரம் ஆதீனம், இந்து சமய அறநிலையத் துறை மட்டுமின்றி மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் தினமும் மதிய உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறையை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதனமோகன் (75), கரோனா நோயாளிகள் 200 பேருக்கு காலை உணவினை ஏற்பாடு செய்து, மருத்துவர் வீரசோழனிடம் வழங்கினார். தள்ளாத காலத்திலும் உதவி செய்யும் அவரது இச்சேவையினை மருத்துவமனை நிர்வாகத்தினர் பாராட்டினர்.
இதையும் படிங்க: கரோனா - இன்சூரன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டுகோள்