ETV Bharat / state

மீன்பிடி துறைமுக படகு இறங்கு தளத்தை நீட்டிக்க கோரிக்கை - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்

சீர்காழி அருகே படகுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், பழையார் மீன்பிடி துறைமுகத்தின் படகு தளத்தை 300 மீட்டர் நீட்டிக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி துறைமுக படகு இறங்கு தளத்தை நீட்டிக்க கோரிக்கை!

author img

By

Published : Sep 15, 2021, 7:16 PM IST

மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த பழையார் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட ஆறு கிராமங்களைச் சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள், தங்களது 350 விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடிக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு மூன்று கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் இந்தத் துறைமுகத்தில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு மீன்களும் உலர் கருவாடுகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் அடித்துவரப்பட்ட மணல், சுமார் 200 மீட்டர் வரை படகு தளத்தை மூடியுள்ளது.

படகு இறங்கு தளம் நீட்டிப்பு

இதனால் மீனவர்கள் படகுகளை உரிய இடங்களில் நிறுத்த முடியாமலும், பிடித்து வந்த மீன்களை ஏலக்கூடத்திற்கு கொண்டு செல்லவும் பெருமளவு சிரமப்படுகின்றனர். தொடர்ந்து படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், படகுகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் கடுவையாற்றில் நிறுத்தப்படுகின்றன.

இதனால் அவசர காலங்களில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இட நெரிசலால் தங்கள் படகுகளை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பழையாறு மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரி, படகு இறங்கு தளத்தை 300 மீட்டர் வரை நீட்டித்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.