ETV Bharat / state

மயிலாடுதுறையில் இளம்பெண் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்! - Porayar Police

தரங்கம்பாடி அருகே திருமணமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் மர்மம் இருப்பதாக கூறி உயிரிழந்த இளம்பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 3 வருடத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : Jun 19, 2023, 10:20 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டதை தொடர்ந்து சந்தேக மரணமாக பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி ஆர்டிஓ தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி உத்திராபதியார் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 36), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நளமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் மதுபாலா (வயது 28) ஆகிய இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் 17 பவுன் நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களை வரதட்சணையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் செந்தில்குமார் பணம், நகை கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாகப் பெண்வீட்டார் கடந்த வருடம் சீர்காழி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின், மனைவி மதுபாலாவை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகக் கூறி சமாதானம் பேசி கணவர் செந்தில்குமார் அழைத்துச் சென்றுள்ளார். தற்போது செந்தில்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையிலும், மதுபாலாவிடம் அவர் மற்றும் அவரது வீட்டில் உள்ளோர் மேலும் ரூ.10 லட்சம் பணம், 10 பவுன் நகை கேட்டுக் கடந்த சில மாதங்களாக மதுபாலாவை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி தில்லையாடியில் உள்ள தனது வீட்டில் மதுபாலா, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அதிர்ச்சியடைந்த மதுபாலாவின் குடும்பத்தினர் மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக பொறையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பொறையாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில்குமார் வெளி நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில், மதுபாலாவின் உடல் இன்று (ஜூன் 19) உடற்கூராய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் செந்தில்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று கூறி உறவினர்கள் மதுபாலாவின் உடலை வாங்க மறுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடடிவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மதுபாலாவின் உடலைப் பெற்றுச் சென்றனர்.

இதையும் படிங்க: Bhopal: நாய் போல் குரைக்குமாறு இளைஞர் துன்புறுத்தல்... 3 இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.