நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் டிஇஎல்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது. இந்த விடுதியில் மணல்மேட்டைச் சேர்ந்த அபிக்காயில் ஜெனீஸ் என்ற மாணவி தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமாலையில் இருந்து இரவு 9மணி வரை மாணவி விடுதியில் இல்லாததால், விடுதி வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையறிந்து விடுதிக்கு வந்த பெற்றோர் மாணவியை தேடியபோது, அங்குள்ள குளியலறையில் மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து மாலையில் மாயமான மாணவி குறித்து இரவு வரை தகவல் தெரிவிக்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் பெற்றோர், உறவினர்கள் ஈடுபட்டனர். மேலும் பள்ளி மாணவிகளை பாதுகாப்பதில் மெத்தன போக்குடன் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.