ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியிடப்பட்டது. 'தர்பார்' படம் வெளிவந்ததை முன்னிட்டு வழக்கம் போல் திரையரங்கு முன்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்காமல் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.
நாகை மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் குழந்தைகளுக்கு தேவையான மெத்தை, பவுடர், சோப்பு உள்ளிட்ட தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பொருட்களை குழந்தைகளின் தாய்மார்களிடம் வழங்கினார். அப்போது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜசேகர், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.