நாகை மாவட்டம் சீர்காழியில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அதிகளவில் கொண்டுசெல்லப்படுகின்றனர். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து அவசர உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் இயங்கி வருகிறது.
இந்த வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் சாலை ஓரத்திலோ அல்லது பேருந்து நிறுத்தத்திலோ தான் அதன் ஊழியர்கள் நிறுத்தியுள்ளனர். பல வாகனங்களில் ஒருபுறத்தில் மட்டுமே முகப்பு விளக்கு எரிகிறது.
வாகனத்தின் டயர்கள் தேய்ந்த நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. மழைகாலத்தில் வாகனத்தின் உள்ளேயே மழைநீர் வருகிறது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் கேட்டபோது, 'நாங்கள் நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, அரசு தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன் நல்ல நிலையில் உள்ள வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் கூறினர்.
இதையும் படிங்க: இதயத்தோடு விரைந்த ஆம்புலன்ஸ்! - 29 கி.மீ தொலைவை 22 நிமிடங்களில் கடந்தது!