மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் ஆயுள் விருத்தி வேண்டி குடும்பத்தினருடன் வந்து வயதான தம்பதிகள் 60 வயதில் உக்ரரத சாந்தி, 61 வயதில் சஸ்டியப்பதபூர்த்தி, 70 வயதில் பீமரதசாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகமும், 100வயது முடிந்தவர்கள் பூர்ணாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் தினந்தோறும்’ ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சீர்காழி எடமணல் மேலபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி -கோமளவல்லி தம்பதியினர் 100 வயது முடிந்து 101 வயது தொடங்கியதை முன்னிட்டு திருக்கடையூர் ஆலயத்தில் பூர்ணாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதில் 4 தலைமுறை பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு தமபதிக்கு திருமணம் நடத்தி வைத்தனர். இதனை கண்ட மற்ற தம்பதிகள் மற்றும் பக்தர்கள் வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.
இந்த அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்து மார்க்கண்டேயனுக்கு என்றும் சிரஞ்சீவி என்று வரம் அளித்து எமனை மீண்டும் உயிர்ப்பித்த தலம். இதனால் இவ்வாலயத்தில் காலசம்ஹாரமூர்த்தியை செய்து ஆயூள் விருத்தி வேண்டி ஹோமங்கள் மற்றும் திருமணங்கள் செய்துகொண்டால் பூரண சௌபாக்கயத்துடன் வாழலாம் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த தாயின் ஆசையை பூர்த்தி செய்த மகன்