ETV Bharat / state

மயிலாடுதுறையில் பருத்தி, பச்சைப்பயிறு கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி - Purchase of cotton and green gram in Mayiladuthurai

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி பச்சைபயறும் கொள்முதல்செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

mayiladuthurai
mayiladuthurai
author img

By

Published : Jun 15, 2021, 2:06 PM IST

மயிலாடுதுறை: வெளிச்சந்தையைவிட கிலோவுக்கு 10 ரூபாய் கூடுதலாக பருத்தி, பச்சைப்பயிறு கொள்முதல்செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பருத்தியை செம்பனார்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலம் மூலமும், சில்லறை வியாபாரிகளிடமும் விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் தொடங்கியது. தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 15 வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் சுமார் 400 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர். இதில், அதிகபட்சமான விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,890-க்கும், குறைந்தபட்சம் குவிண்டால் ஒன்றுக்கு விலை ரூ.6,200-க்கும் தனியார் வியாபாரிகள் கொள்முதல்செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மயிலாடுதுறையில் பருத்தி, பச்சைப்பயிறு கொள்முதல்

இதேபோல் பச்சைப்பயிறு விவசாயிகளிடமிருந்து ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதாரவிலை திட்டத்தின்கீழ் தேசிய வேளாண் முகமை மூலம் 125 மெட்ரிக் டன் கிலோ ஒன்றுக்கு 71.96 பைசாவுக்கு கொள்முதல்செய்யப்பட்டது. வெளிச்சந்தையைவிட கிலோவுக்கு 10 ரூபாய் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: நண்டலாறு தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.