நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மறையூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கோவங்குடி, மறையூர் வடிக்கால் வாய்கால்களை தூர்வாராததாலும் ஆக்கிரமிப்பை அகற்றாததாலும் தற்போது பெய்த மழையால் கடந்த ஒருவார காலமாக குடியிருப்பை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய்துறையினரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறையூர் pபரதான சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த துணைக் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, தாசில்தார் முருகானந்தம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடைபெறும் என்று உறுதியளித்ததின்பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: சுடுகாடுப்பாதையை ஆக்கிரமித்த தனியார் நிறுவனம் - பொதுமக்கள் போராட்டம்!