தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறி மோசமான நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.
இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தினந்தோறும் சாலை விபத்தில் சிக்கி கை கால் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுச்செல்வது வாடிக்கையாகியுள்ளது.
மயிலாடுதுறை, சிதம்பரம், கும்பகோணம், காரைக்கால் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் குழி இருப்பது தெரியாமல் குடும்பத்துடன் செல்லும் சாலையில் பள்ளத்தில் விழுந்து காயத்துடன் செல்கின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலையைச் சீரமைத்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் சாலையை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.