மயிலாடுதுறை: சீர்காழி - சிதம்பரம் சாலையில் கொள்ளிடமுக்கூட்டு பிரதான சாலையின் ஓரம் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும், வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், வர்த்தகர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி தொடர்ந்து பல்வேறுதரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வணிகர்கள், தன்னார்வலர்கள் மக்களுக்கு இடையூரான டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி சனிக்கிழமை (ஏப்.10) கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதனையடுத்து கடைக்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், சீர்காழி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில், டாஸ்மாக் மேலாளர் ஜெயபால், டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் ரவி உள்ளிட்டோர் பொதுமக்கள், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாகவும், அதுவரை கடையை திறக்கப் போவதில்லை என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: 'சாதியத்தை அறுத்தெறிந்த கர்ணனின் வாள்' - அடுத்தடுத்து குவியும் பாராட்டுகள்