நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தேரிழந்தூர் ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் காயல் மஹ்பூப், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிரணித் தலைவர் காளியம்மாள், எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
கூட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
‘எத்தனைக் கட்சிதான் மாறுவார்... குழப்பத்தில் திருநாவுக்கரசர்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்