ETV Bharat / state

நூலகத்தை சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை - Public demand

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே பராமரிப்பின்றி நூலகம் ஒன்று இயங்கி வருவதாகவும், அதை விரைந்து சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நூலகத்தை சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை
author img

By

Published : Jun 26, 2019, 4:26 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம, சீர்காழி அடுத்த நாங்கூர் கிராமத்தில் கிளை நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூலகம் 1961ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில்18ஆயிரத்து 133 நூல்கள் உள்ளன.நூலகம் தொடங்கிய காலத்தில் அருகில் இருந்த ஊராட்சி அலுவலகம் மின் இணைப்பு மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நூலகத்தில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், நூகலத்தின் மேற்கூரையும் பெயர்ந்துள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் மழைக் காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்து நூல்கள் அனைத்தும் சேதமடைகின்றது. பராமரிப்பு இன்றி செயல்படும் நூலகத்தை விரைந்து சீர்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:சீர்காழி அருகே நூலகம் கடந்த 3வருடத்திற்கு மேலாக மின்இணைப்பு இன்றி, வாசகர் தலையில் இடிந்து விழும் அவலநிலை இயங்கி வருகிறது.Body:சீர்காழி அருகே நாங்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகாமையில் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் கிளை நூலகம் இயங்கிவருகிறது. இந்த நூலகம் 1961ம் ஆண்டு கட்டப்பட்ட இங்கு 18ஆயிரத்து 133 நூல்கள் உள்ளன. நூலகம் தொடங்கிய காலத்தில் அருகாமையில் இருந்த ஊராட்சி அலுவலகம் மின் இணைப்பு மூலம் கிளை நூலகத்திற்கும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் மின்சாரம் வினியோகம் சென்றது.பிறகு தனி, தனியாக ஒவ்வொரு துறையும் மின்சாரம் இணைப்பு பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ரீதியில் மின் இணைப்பு நூலகத்திற்கு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர், கடந்த 3ஆண்டுகளுக்கு மேலாக கிளை நூலகம் மின்இணைப்பு வசதி இல்லாமல் இயங்கிவருகிறது. பழமையான ஓட்டு கட்டிடம் என்பதால் ஓடுகள் உடைந்து மழைகாலங்களில் மழைநீர் உட்புகுந்து அரிய வகை நூல்கள் நனைந்து சேதமாகின்றன. கட்டிடமும் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் ஆங்காங்கே சுவர்கள் விரிசல் விட்டு இடிந்து விழும் அபாயகரமாக நிலையில் உள்ளது. தரைகளும் மிகுந்த சேதமடைந்துள்ளதுநாங்கூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியுடன் நூலகம் இணைவு பெற்றுள்ளதால் அப்பள்ளி மாணவர்கள் நாள்தோறும் மாலை நேரங்களில் நூலகத்திற்கு வந்து நூல்களை வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி வரும் மாணவ மாணவிகள் மின்இணைப்பு இல்லாமல் நூலகம் இருண்டு கிடப்பதால் பெரிதும் பாதிப்படைகின்றனர். மழைகாலங்களில் பகல் நேரத்திலும் நூலகம் இருண்டு கிடக்கும் நிலையில்தான் உள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.காலை 9மணி முதல் மாலை 6மணி வரை இயங்கும் நூலகத்திற்கு மாலை 4மணிக்கு மேல் வாசகர்கள் யாரும் வருவதில்லை. போதிய பராமரிப்பின்றி,மின் இணைப்பு வசதியில்லாமல் இருக்கும் நாங்கூர் கிளை நூலகத்தை மேம்படுத்தும் வகையில் மின் இணைப்புடன் புதிய கட்டிடம் கட்டவேண்டும் என நூலக வாசகர்கள்,மாணவமாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.