நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் பெரும்பாலான சாலைகளில் குண்டும் குழியுமாக இருப்பதால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. மயிலாடுதுறை நகராட்சி 36 வார்டுகளில் சீரமைப்புப் பணிகளுக்காக தோண்டப்படும் பாதாள சாக்கடை, ஆள்நுழைவுத் தொட்டிகள் பணி முடிந்ததும் சரிசெய்யப்படுவதில்லை.
இதன்காரணமாக, சாலைகளில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக பெய்யும் மழையால் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம், கும்பகோணம், தரங்கம்பாடி, திருவாரூர் மார்கங்களில் வாகனங்களில் செல்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே, நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ. 2.40 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்!