ETV Bharat / state

பள்ளம் தோண்டியபோது கிடைத்த ஐம்பொன் சிலைகளுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு - நேரில் பார்வையிட்ட எஸ்.பி.! - சீர்காழி ஐம்பொன் சிலைகள்

சீர்காழியில் கிடைக்கப்பெற்ற ஐம்பொன் சிலைகளுக்கு அமைக்கப்பட்ட இரண்டடுக்கு பாதுகாப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 19, 2023, 10:32 PM IST

Updated : Apr 19, 2023, 10:39 PM IST

ஐம்பொன் சிலைகளுக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு

மயிலாடுதுறை: சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான பழமையான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு, மே மாதம் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் தோண்டிய பொழுது 22 ஐம்பொன்னாலான சிலைகளும், 55 பீடம் மற்றும் 462 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை அடுத்து ஐம்பொன் சிலைகளும் மற்றும் செப்பேடுகளும் கோயிலின் பாதுகாப்பு அறையில் வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

கடந்த 17ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்கத் திட்ட குழுவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி சட்டநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இதுவரை தமிழ்நாட்டில் ஓலைச்சுவடியில் எழுதிய பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும்; முதன்முறையாக, அதிக அளவு பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு, தற்போது இந்த சீர்காழியில் தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில் விலைமதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்புக் கருதி கூடுதலாக இரும்பு கிரில் கேட் பொருத்தப்பட்டுள்ளதை மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் 745 திருக்கோயில்களில் ரூ.331 கோடியில் திருப்பணிகள்" - அமைச்சர் சேகர்பாபு!

Last Updated : Apr 19, 2023, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.