ETV Bharat / state

நாகையில் மழை வேண்டி ஸ்ரீநரசிம்மர் கல்யாண உற்சவம்! - mayiladudurai temple

நாகை: மழைப்பொழிய வேண்டி மயிலாடுதுறையில் நடைபெற்ற ஸ்ரீநரசிம்மர் கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று பஜனை பாடல்களுடன் ஆடிப்பாடி வழிபாடு செய்தனர்.

mayiladudurai temple
author img

By

Published : May 27, 2019, 9:55 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஸ்ரீலெட்சுமி நரசிம்மர் கல்யாண உற்சவம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றுவந்தன. ஆண்டுதோறும், சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீநரசிம்மர் அவதரித்ததாக புராணம் கூறுகிறது.

இதனை முன்னிட்டு, எட்டாவது ஆண்டாக நரசிம்மர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோடைகாலத்தில், ஸ்ரீலெட்சுமி நரசிம்மருக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தினால், வெப்பம் தணிந்து மழைபொழிந்து உலகம் செழிக்கும் என்பது ஐதீகம்.

இதன் காரணமாக நடைபெற்ற உற்சவத்தில் நாமசங்கீர்த்தனம், அலங்கார திவ்ய நாதம், நிச்சயத்தாம்பூலம், உஞ்சவ்விருத்தி, பிரகலாதசரித்திரம் உள்ளிட்ட சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று (மே 26) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீலெட்சுமிநரசிம்மர் கல்யாணம் நடைபெற்றது.

மழை வேண்டி ஸ்ரீநரசிம்மர் கல்யாண உற்சவம்

இதனை முன்னிட்டு, பஜனை பாடல்களை பக்திப்பரவசத்துடன் பக்தர்கள் பாடி, வழிபாடு செய்தனர். பாகவத புராணம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாங்கல்யதாரண நிகழ்ச்சியுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.