ETV Bharat / state

வழிப்பறி திருடனை துரத்திச் சென்று பிடித்த காவலருக்கு பாராட்டு

தரங்கம்பாடி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற இருவரில் ஒருவரை துரத்திச் சென்று பிடித்த காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

v
v
author img

By

Published : Jul 12, 2021, 7:26 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி மங்களம். இன்று காலை (ஜூலை 11) கடலி மெயின்ரோட்டில் தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பல்சர் வாகனத்தில் வந்த இருவர், மங்களம் மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இதில் மூதாட்டி மங்களம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது குத்தாலம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றும் சுரேஷ், நல்லாடை சோதனைச் சாவடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

சம்பவத்தை நேரில் கண்ட சுரேஷ், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து வழிப்பறிக் கொள்ளையர்களின் வாகனத்தை தனது வாகனத்தால் மோதியுள்ளார். ஆனால், சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் வேகமாக வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

5 கி.மீ தூரம் துரத்திப் பிடித்த காவலர்

சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொள்ளையர்களை துரத்திச் சென்ற சுரேஷ், மேமாத்தூர் பகுதியில் கொள்ளையர்களின் வாகனத்தை மறித்தார். செய்வதறியாது திகைத்த கொள்ளையர்கள் இருவரும் வயலில் இறங்கி ஓடத் தொடங்கினர். இருப்பினும் தொடர்ந்து அவர்களை துரத்திய சுரேஷ், கொள்ளையர்களில் ஒருவனை பிடித்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற தலைமை காவலர் அன்பழகன், கொள்ளையன் தப்பி ஓடிவிடாமல் சுரேஷுக்கு உதவினார். ஆனால், மற்றொரு கொள்ளையன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடினான். உடனடியாக காவலர் சுரேஷ், மயிலாடுதுறை காவல்துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜிடம் நடைபெற்ற சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.

கொள்ளையன் ஒப்படைப்பு

இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில், செம்பனார்கோயில் காவல் உதவி ஆய்வாளர் மங்களநாதன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிடிபட்ட கொள்ளையனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் சம்பவம் நடைபெற்ற இடம் பெரம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால், பிடிபட்ட கொள்ளையன் செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் சுகந்தியிடம் ஒப்படைக்கப்பட்டான். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வைத்தீஸ்வரன்கோயிலைச் சேர்ந்த முத்து என்பவரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

காவலருக்கு பாராட்டு

மேலும் நகையுடன் தப்பியோடியவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜா என்பதும் கண்டறியப்பட்டது. தற்போது தங்கச் சங்கிலியுடன் தப்பியோடிய திருடனை பிடிக்க்கும் பணியில் தனிப்படை காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நகைபறிப்பு நடைபெற்ற குறுகிய நேரத்தில் கொள்ளையனை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்த காவலர் சுரேஷுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.