ETV Bharat / state

’தேர்தலில் பாஜக முகத்திரையைத் தோலுரிப்போம்’: சூளுரைத்த பி.ஆர்.பாண்டியன் - farmers rally in nagappattinam

நாகப்பட்டினம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முகத்திரையைத் தோலுரிப்போம் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

farmers rally
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணி
author img

By

Published : Jan 10, 2021, 8:25 AM IST

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், நெல் குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வலியுறுத்தியும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று (ஜன.9) நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பரப்புரை பேரணி நடத்தினர். தமிழக காவிரி விவசாயிகள் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் பேரணி தொடங்கியது.

இந்தப் பேரணி நாகப்பட்டினம் அவுரித்திடலுக்கு வந்தடையும்போது, விவசாயிகள் மத்தியில் பேசிய பிஆர் பாண்டியன், 'புதிய வேளாண் சட்டத்தை பாராளுமன்றத்தில் கூட்டி விவாதித்து ரத்து செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரை வலியுறுத்த வேண்டும். வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால், தமிழ்நாட்டு மக்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை புறக்கணிப்பார்கள்’ என்றார்.

பி.ஆர்.பாண்டியன் பேசிய காணொலி

தொடர்ந்து பேசிய அவர், ’தமிழ்நாடு அரசியலை நிர்ணயிக்கிற சக்தியாக விவசாயிகள் உள்ளனர். எனவே தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்கும் சட்டத்திற்கும் அதனை அழிக்க துடிக்கும் மோடிக்கும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயிகளின் குரல் ஓங்கிஒலிக்கும். அப்போது பாஜகவின் முகத்திரையை தோலுரித்து காட்டுவோம். பாஜகவிற்கு துணைப்போகும் இயக்கங்களுக்கு எதிராக தேர்தலில் களம் இறங்குவோம்” எனச் சூளுரைத்தார்.

இதையும் படிங்க:பாதை இல்லாமல் இறந்தவர் உடலை வயல் வழியே தூக்கிச்செல்லும் அவலம் - அலட்சியம்காட்டும் அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.